தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் முன் போர் பயிற்சி !!

  • Tamil Defense
  • March 28, 2021
  • Comments Off on தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் முன் போர் பயிற்சி !!

இந்தியா வந்துள்ள தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் ஸூஹ் வூக் இன்று ஆக்ரா ராணுவ தளத்திற்கு சென்றார்.

அங்கு அவர் முன் இந்திய தரைப்படையின் பாராசூட் படை வீரர்கள் போர் பயிற்சி செய்தனர்.

ஒரு முழு பட்டாலியன் அளவிலான வீரர்கள் விமானங்களில் இருந்து குதித்து போரில் செயல்படுவதை தத்ரூபமாக நடித்து காட்டினர்.

தென்கொரிய அமைச்சருடன் இந்திய கடற்படைக்கான கண்ணிவெடி போர்முறை கப்பல்கள் குறித்தும்

மேலதிக கே9 வஜ்ரா பிரங்கி அமைப்புகளை வாங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.