நவீனத்துவம் மிக்கதாக இந்திய ராணுவம் மாற வேண்டும் பிரதமர் மோடி பேச்சு !!

  • Tamil Defense
  • March 11, 2021
  • Comments Off on நவீனத்துவம் மிக்கதாக இந்திய ராணுவம் மாற வேண்டும் பிரதமர் மோடி பேச்சு !!

குஜராத் மாநிலம் கேவாடியாவில் முப்படை தளபதிகள் ஆலோசனை மாநாடு நடைபெற்று வருகிறது, இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது காலத்திற்கேற்ப இந்திய ராணுவம் நவீனத்துவம் நிறைந்ததாக மாற வேண்டும் எனவும் தேவையற்ற விஷயங்களை அகற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டார்.

இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள், எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி கூட்டுப்படைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் பிரதமருக்கு விளக்கினார்.

மேலும் பிரதமர் பேசுகையில் பாதுகாப்பு துறையில் தன்னிறைவு தேவை அது தளவாடங்கள் என்பதையும் தாண்டி கொள்கைகள், செயல்பாடுகள், திட்டங்கள் ஆகியவற்றிலும் இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.