நான்கு ட்ரோன்களை குத்தகை அடிப்படையில் பெற்ற தரைப்படை !!
1 min read

நான்கு ட்ரோன்களை குத்தகை அடிப்படையில் பெற்ற தரைப்படை !!

இஸ்ரேலிடமிருந்து இந்திய தரைப்படை நான்கு ட்ரோன்களை குத்தகை அடிப்படையில் பெற்றுள்ளது.

இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஹெரோன் ட்ரோன்கள் தான் அவை.

வருகிற ஆகஸ்ட் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதத்திற்கு இடையிலான காலகட்டத்திற்கு உள்ளாக இவை டெலிவரி செய்யப்படும் என கூறப்படுகிறது.

இதற்கான ஒப்பந்தம் கடந்த ஜனவரி மாதம் ராணுவத்திற்கு வழங்கபட்ட சிறப்பு அதிகாரங்கள் வாயிலாக கையெழுத்து ஆகியது.

இந்த ட்ரோன்களுடைய குத்தகை காலம் சுமார் மூன்று வருடங்களாகும் மேலும் இவை சீன எல்லையை கண்காணிக்க பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.