நேரடியாக சந்திக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் !!

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹமுது குரேஷி ஆகியோர் இந்த மாதம் சந்தித்து பேச உள்ளனர்.

தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பே நகரில் ஆஃப்கானிஸ்தான் நாட்டின் எதிர்காலத்தை பற்றிய பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இது இஸ்தான்புல் நடவடிக்கை என்ற துருக்கியின் ஆஃப்கானிஸ்தான் நாட்டின் எதிர்காலம் பற்றிய முயற்சி ஆகும்.

இந்த சந்திப்பில் கலந்து கொள்ளும் இரு அமைச்சர்களும் 30ஆம் தேதி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச உள்ளனர்.

இரு அமைச்சர்களும் இதுவரை சந்தித்து பேசியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது .

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆகியோரின் பேச்சக்கு பிறகு இந்த சந்திப்பு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.