
இந்தியா மற்றும் அமெரிக்க கடற்படைகள் இடையேயான இரண்டு நாட்கள் கூட்டு பயிற்சி நேற்று தொடங்கியது.
இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். ஷிவாலிக் ஸ்டெல்த் ஃப்ரிகேட் கப்பல் மற்றும் பி8ஐ நீர்மூழ்கி வேட்டை விமானங்கள் ஆகியவை இதில் கலந்து கொண்டன.
அமெரிக்க கடற்படை சார்பில் யு.எஸ்.எஸ். தியோடர் ரூஸ்வெல்ட் விமானந்தாங்கி கப்பல் தாக்குதல் படையணி கலந்து கொண்டுள்ளது.
மேலும் இந்திய விமானப்படையின் சுகோய்30 மற்றும் ஜாகுவார் போர் விமானங்களும் இந்திய அமெரிக்க கடற்படை பயிற்சியில் முதல் முறையாக கலந்து கொண்டது கூடுதல் சிறப்பாகும்.
இந்த இரண்டு நாள் கூட்டு பயிற்சிகள் பாஸ்எக்ஸ் ரக பயிற்சி என்பது குறிப்பிடத்தக்கது.