இரண்டே வருடத்தில் தனது பலத்தை பெருக்கி கொண்ட இந்திய விமானப்படை

  • Tamil Defense
  • March 2, 2021
  • Comments Off on இரண்டே வருடத்தில் தனது பலத்தை பெருக்கி கொண்ட இந்திய விமானப்படை

கடந்த இரண்டு வருடங்களில் கணிசமாக அதிகரித்துள்ள சக்தி !!

இந்திய விமானப்படை இரண்டு வருடங்கள் முன்னர் பாலகோட்டை தாக்கியது, இதற்கு பிறகு அதன் திறன்கள் கணிசமாக அதிகரித்து உள்ளன.

கடந்த இரண்டு வருடங்களில் ரஃபேல், அபாச்சி, சினூக் என புது வானூர்திகள் மற்றும் பல அதிநவீன ஆயுதங்களை இந்திய விமானப்படை படையில் சேர்த்துள்ளது.

இதன் பலன் லடாக் எல்லை பிரச்சினையில் கிடைத்துள்ளது கண்கூடாக தெரிகிறது.

விமானப்படையின் சி17, சி130 மற்றும் சினூக் வானூர்திகள் வீரர்கள் , சப்ளைகள் மற்றும் கனரக தளவாடங்களை உடனடியாக எல்லைக்கு நகர்த்த பேருதவியாக இருந்தன.

மீட்டியோர், மைகா போன்ற அதிநவீன ஏவுகணைகள் மற்றும் ஸ்மார்ட் குண்டுகள் உடன் ரஃபேலும்,

நிமிடத்திற்கு 100க்கும் அதிகமான இலக்குகளை அடையாளம் கண்டு ஹெல்ஃபயர் ஏவுகணைகளை தாக்கும் திறன் கொண்ட அபாச்சி ஹெலிகாப்டர்கள் ஆகியவை சீனர்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய சவால் தான்.

இனியும் டேங்கர் மற்றும் போர் விமான எண்ணிக்கைகளில் நிலவும் குறைபாட்டை போக்க விமானப்படை தீவிரமாக முயன்று வருகிறது.