சீனாவின் திருட்டுத்தனம் உலகறிந்த விஷயம் ஆகும், பல நாடுகளின் பொருட்களை பெற்று கொண்டு அதை திருட்டுதனமாக காப்பி அடித்து உருவாக்குவது அவர்களுக்கு கைவந்த கலை.
சீனாவின் நெருங்கிய நட்பு நாடான ரஷ்யாவே கூட தற்போது சீனாவுக்கு ஆயுதம் விற்க யோசிக்கிறது அந்தளவுக்கு சீனர்கள் களவாணித்தனம் கொண்டவர்கள்.
சீனாவில் மொபைல் போன்ற சாதனங்களை தயாரிக்க வேண்டுமானால் நிறுவனங்கள் முதலீடு செய்யலாம்
ஆனால் ஒரு போதும் எந்தவொரு பாதுகாப்பு துறை நிறுவனமும் சீனாவில் முதலீடு செய்யப்போவதில்லை,
இதற்கு காரணம் தங்களது உழைப்பால் உருவாக்கிய தொழில்நுட்பம் திருடப்படும் அபாயம் தான்.
அதே நேரத்தில் இந்தியா பல ஆண்டுகளாக நம்பகத்தன்மை மிகுந்த நாடாக பெயர் பெற்றுள்ளது .
பல நாட்டு பாதுகாப்பு நிறுவனங்கள் முதலீடு செய்வதுடன் நின்று விடாமல் கூட்டு தயாரிப்பில் ஈடுபடவும் விரும்புகின்றனர்.
தங்களது அதிநவீன ஆயுதங்களை விற்பது, தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் தயாரிக்க அனுமதிப்பது போன்றவை தங்கள் உழைப்பை இந்தியா திருடி விடாது எனும் நம்பிக்கையால் வந்தவை ஆகும்.
இந்தியா அதிநவீன ஆயு அமைப்புகளை குறைந்த செலவில் தயாரிக்கிறது மேலும் அவற்றின் நம்பகத்தன்மையும் அதிகம்,
இதன் காரணமாக எதிர்காலத்தில் இந்தியா ஆயுத சந்தையில் சீனாவை பின்தள்ளுவது மட்டுமின்றி மிகப்பெரிய இடத்தை பிடிக்கும் வாய்ப்பு உள்ளதாக அந்த இதழ் கட்டுரை வெளியிட்டு உள்ளது.