பறக்கும் நீரடிகணைகளை உருவாக்கும் பணி ஆரம்பம் !!

  • Tamil Defense
  • March 24, 2021
  • Comments Off on பறக்கும் நீரடிகணைகளை உருவாக்கும் பணி ஆரம்பம் !!

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அதிநவீன இலகுரக நீரடிகணையான ஷயினாவை மேம்படுத்த உள்ளது.

இதன்படி இந்த புதிய மேம்படுத்தலின் மூலமாக ஷயினா நீரடிகணை பறந்து சென்று தாக்கும் திறனை பெற உள்ளது.

அதாவது பி8ஐ போன்ற விமானங்கள் அல்லது ஹெலிகாப்டர்களில் இருந்து நீர்மூழ்கி கப்பல்களை நோக்கி ஏவப்படும்,

ஏறத்தாழ பத்து நிமிடங்களில் 25 முதல் 30 கிலோமீட்டர் தொலைவு வரை பயணித்து சென்று இறக்கைகளை உதிரக்கும்.

பின்னர் பாராசூட் மூலமாக நீருக்குள் பாய்ந்து சென்று அடுத்து ஒரு 20 கிலோமீட்டர் வரை இலக்கை விரட்டி சென்று தாக்கும் திறனை இது கொண்டிருக்கும்.

இந்த புதிய மேம்பாட்டு பணியின் ஒரு பகுதியாக ஜிபிஎஸ் கருவி முலமாக இலக்கை பற்றிய தகவல்களை அவ்வப்போது பெற்று கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.