Breaking News

இராணுவ தளவாடங்கள் இறக்குமதிக்கான லிஸ்ட் தயார்

  • Tamil Defense
  • March 20, 2021
  • Comments Off on இராணுவ தளவாடங்கள் இறக்குமதிக்கான லிஸ்ட் தயார்

இரண்டாவது இறக்குமதி தடை பட்டியல் தயாராகி வருகிறது !!

பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்களின்படி இரண்டாவது இறக்குமதி தடை பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் இந்திய கூட்டு படைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஃபிக்கி கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும்போது,

டெக்னோ க்ளோதிங் எனும் முறையை பயன்படுத்தி அதிநவீன சீருடைகளை இந்திய நிறுவனங்கள் தயாரித்தால் இறக்குமதி தடை செய்யப்படும் என கூறியது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தியா உள்நாட்டிலேயே பல்வேறு அதிநவீன ஆயுத அமைப்புகளை உருவாக்கி வருகிறது.

குறிப்பாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஏறத்தாழ 25 திட்டங்களை தற்போது பல்வேறு அமைப்புகளுடன் அமல்படுத்தி வருகிறது.

அதே போல் இந்திய தரைப்படை 11திட்டங்களை 23 நிறுவனங்களுடன் செயல்படுத்தி வருகிறது,

இந்திய விமானப்படையும் சுமார் 11 திட்டங்களை 17 நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது,

இந்திய கடற்படையும் தன் பங்குக்கு சுமார் 21 நிறுவனங்களுடன் இணைந்து 9 வெவ்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இப்படி இந்தியா பாதுகாப்பு துறையில் தன்னிறைவு பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.