விரைவில் உள்நாட்டு ஸ்டெல்த் போர் விமான திட்டதுக்கு அனுமதி !!

மத்திய அரசு விரைவில் உள்நாட்டு ஸ்டெல்த் போர் விமான திட்டத்திற்கு அனுமதி வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல் கட்டமாக சுமார் 15,000 கோடி ருபாயில் முதல் சோதனை விமானங்கள் உருவாகும் என கூறப்படுகிறது, இதற்கு இவ்வாண்டின் மத்திய பகுதியில் அனுமதி வழங்கப்பட உள்ளது.

மேலும் இந்திய விமானப்படை நவீனமயமாக்கலின் ஒரு பகுதியாக 2032 முதல் சுமார் 240 ஸ்டெல்த் போர் விமானங்களை படையில் இணைக்க விரும்புகிறது.

முதல் இரண்டு ஸ்க்வாட்ரன்களில் ஆம்கா மார்க்-1 ரகமும், அடுத்த நான்கு ஸ்க்வாட்ரன்களில் 6ஆம் தலைமுறை தொழில்நுட்பங்களை கொண்ட ஆம்கா மார்க்-2 ரகமும் இடம்பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறும்போது ஆம்கா மார்க்-1 விமானங்களில் அமெரிக்க ஜி.இ 414 என்ஜின்கள் பயன்படுத்தப்படும் எனவும், ஆம்கா மார்க-2 விமானங்களில் இந்திய தயாரிப்பு என்ஜின் பயன்படுத்தப்படும் எனவும் கூறினர்.

அடுத்த எட்டு ஆண்டுகளில் முதல் விமானம் பறக்கும் எனவும், 6ஆம் தலைமுறை தொழில்நுட்ப பணிகள் துவங்கி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.