இந்தியாவின் அணுசக்தி தாக்கும் நீர்மூழ்கி கப்பல்கள் குறித்த முக்கிய தகவல் !!

இந்திய கடற்படை சமீபத்தில் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை கட்ட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது, அந்த வகையில் தற்போது மிக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அரசு முதல்கட்டமாக சுமார் மூன்று அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை கட்ட அனுமதி அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மூன்று அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை கட்டுவதற்கான அனுமதி பிந்தைய காலத்தில் வழங்கப்படும் என தெரிகிறது.

இதன் மூலம் சீனாவை எதிர்கொள்ளும் நீண்ட கால திட்டத்திற்கு இந்தியா முக்கியத்துவம் கொடுப்பது உறுதி ஆகி உள்ளது.