
ப்ராஜெக்ட்17 ஏ நீலகிரி ரக ஃப்ரிகேட் கப்பல்களின் கட்டுமான பணிகள் கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் கப்பல் கட்டுமான தளத்தில் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே ஐ.என்.எஸ். ஹிம்கிரி போர்கப்பல் கடலில் ஏவப்பட்டு மேற்படி கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,
இரண்டாவது நீலகிரி ரக ஃப்ரிகேட் கப்பலின் அடிப்பகுதி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இத்தகைய மூன்றாவது போர்க்கப்பலின் கட்டுமான பணிகள் துவங்கியுள்ளன.
முன்னர் இந்திய கடற்படையில் சேவையில் இருந்த 6 லியான்டர் ரக கப்பல்கள் தான் மறுபடி ஸ்டெல்த் ஃப்ரிகேட்களாக உருவாக்கப்படுகின்றன.
ஆனால் இந்த வகையில் ஐ.என்.எஸ் நீலகிரி உட்பட ஏழு ஸ்டெல்த் போர்க்கப்பல்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.