
பெங்களூரில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இதற்கான உத்தரவாத கடிதத்தை பெற்றுள்ளது.
இதனையடுத்து 12 இலகுரக ஹெலிகாப்டர்களை தயாரிக்கும் பணிகள் அங்கே துவங்கி உள்ளன.
தரைப்படை மற்றும் விமானப்படைக்கு தலா 6 எனும் விகிதத்தில் இந்த ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட உள்ளன.
முதலாவது ஹெலிகாப்டர் அடுத்த வருடம் டெலிவரி செய்யப்படும், தும்கூரில் உள்ள தொழிற்சாலையில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.