
தனது முதல் சுற்றுபயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஆஸ்டின் தனது இந்திய சகா ராஜ்நாத் சிங் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது பல்வேறு முக்கிய விஷயங்களை இருதரப்பினரும் விவாதித்தனர்.
இதில் முக்கிய இடம்பிடித்த ஒன்று ரஷ்யா உடனான இந்தியாவின் எஸ்400 ஒப்பந்தம் ஆகும்.
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என அவர் கூறினார்.
மேலம் எஸ்400 இன்னும் டெலிவரி செய்யப்படவில்லை அதனால் தடை நடவடிக்கைகள் பற்றி பேச வேண்டிய கட்டாயம் எழவில்லை என அவர் கூறினார்.
மேலும் பேசுகையில் இந்தியா எங்களது தவிர்க்க முடியாத கூட்டாளி எனவும் இருதரப்பு உறவுகள் மற்றும் ராணுவ உறவுகளை அடுத்த கட்டம் கொண்டு செல்ல விரும்புவதா கவும் அவர் கூறினார்.
இந்தியாவுக்கு போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்களை வாங்க முயற்சி நடைபெறுகிறது அதில் அமெரிக்காவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.