
இந்த மாதம் 28ஆம் தேதி இந்தியா மிகவும் நவீனமான செயற்கைகோள் ஒன்றை ஏவ உள்ளது.
ஜிசாட் -1 எனும் அந்த செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி எஃப்10 ராக்கெட் வாயிலாக விண்ணுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த செயற்கை கோளானது இந்தியாவின் எல்லைகளை கண்காணிக்கவும், பேரிடர் மீட்பிலும் உதவும் எனவும்,
கடல், விவசாயம், வனங்கள், கனிமங்கள், நிலப்பரப்பு, க்ளேசியர்கள், மழை பொழிவு, மேகங்கள் ஆகியவற்றை பற்றி தகவல் சேகரிக்க உதவும் என கூறப்படுகிறது.
இந்த செயற்கை கோள் இந்த மாதம் 5ஆம் தேதி ஏவப்பட இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 28ஆம் தேதி ஏவப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.