
இந்தியா சமீபத்தில் ப்ராஜெக்ட்18 என்ற பெயரில் மெகா போர்க்கப்பல்களை கட்ட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன கடற்படை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது, இந்திய பெருங்கடல் மற்றும் பசிஃபிக் பெருங்கடல்களில் தனது சக்தியை நிலைநாட்டும் வகையில் பல்வேறு கப்பல்களை கட்டி வருகிறது.
அந்த வகையில் சுமார் 12,000 டன்கள் எடை கொண்ட டைப்055 ரக நாசகாரி கப்பல்களை படையில் இணைத்து வருகிறது, மேலும் இத்தகைய 18 கப்பல்களை படையில் இணைக்க உள்ளது.
இந்த வகை கப்பல்கள் தான் உலகிலேயே அதிக ஏவுகணைகள் தாங்கிய (அதாவது 100க்கும் அதிகம்) என சொல்லப்படுகிறது.
இதனுடன் 8000 டன்கள் எடையிலான நமது விசாகப்பட்டினம் அல்லது கொல்கத்தா ரக நாசகாரி கப்பல்களை ஒப்பிட்டால் மிகப்பெரிய இடைவெளி இருப்பது தெரியும்.
ஆகவே இந்த ஆபத்தை உணர்ந்துள்ள இந்தியா சுமார் 50,000 கோடி ரூபாய் மதிப்பில் 13,000 டன்கள் எடை கொண்ட மெகா நாசகாரி போர்க்கப்பல்களை கட்ட முடிவு செய்துள்ளது.
இந்த வகை கப்பல்களில் மின்காந்த ரெயில் கன் மற்றும் லேசர் ஆயுதங்களை இணைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது ஆனால் இதற்கு அதிக அளவில் நிதி தேவைப்படும்.
ஏற்கனவே பெங்களூர் ரகம் என்ற பெயரில் 10,000 டன்கள் அளவிலான நாசகாரி கப்பல்கள் கட்டவிருந்த நிலையில்
மத்திய அரசு நிதி பற்றாக்குறை என கூறியதால் 8000 டன்கள் எடையிலான விசாகப்பட்டினம் ரக கப்பல்களை கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.