சீனாவுக்கெதிரான சக்தியாக இந்தியாவை நெருங்கும் பிலிப்பைன்ஸ்

  • Tamil Defense
  • March 25, 2021
  • Comments Off on சீனாவுக்கெதிரான சக்தியாக இந்தியாவை நெருங்கும் பிலிப்பைன்ஸ்

பல்வேறு மட்டங்களில் நெருங்கும் இந்தியா மற்றும் ஃபிலிப்பைன்ஸ் !!

சமீப காலமாக இந்தியா மற்று ஃபிலிப்பைன்ஸ் இடையேயான நெருக்கம் பன்மடங்கு அதிகரித்து உள்ளது.

இந்த நெருக்கமானது தூதரக அளவில் ஆரம்பித்து பாதுகாப்பு சுகாதாரம் வரை எட்டியுள்ளது.

இந்தியாவிடம் இருந்து சமீபத்தில் பிரம்மாஸ் ஏவுகணைகளை வாங்க ஃபிலிப்பைன்ஸ் ஒப்பந்தம் செய்து கொண்டது, மேலதிக பிரம்மாஸ் அமைப்புகளை வாங்கும் அறிகுறிகளும் தெரிகிறது.

இதனையடுத்து தற்போது சுகாதார துறையிலும் இந்தியா மற்றும் ஃபிலிப்பைன்ஸ் இணைந்து செயல்பட உள்ளன.

ஃபிலிப்பைன்ஸிற்கான இந்திய தூதர் ஷம்பு குமாரன் பேசும் போது சுமார் 80 லட்சம் டோஸ் தடுப்புசிகளை பெற பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறினார்.

மேலும் ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் தடுப்புசிகளை துறையின் ஜாம்பவான் கார்லிடோ காலவேஸ சமீபத்தில் இந்தியா வந்தார்.

அப்போது அமெரிக்க நிறுவனம் நோவோவாக்ஸ் கண்டுபிடித்த கொவோவாக்ஸ் தடுப்புசிகளை இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்து வருகிறது,

அவர்களிடம் இருந்து சுமார் 3 கோடி டோஸ் தடுப்புசிகளுக்கான ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் இந்த வருடம் அவை ஃபிலிப்பைன்ஸிற்கு டெலிவரி செய்யப்பட்டு விடும் எனவும் கூறினார்.

இவை ஒரு புறம் இருக்க இந்தியா மற்றும் ஃபிலிப்பைன்ஸ் இடையேயான புரிதலுக்கு வித்திட்ட மற்றொரு முக்கியமான விஷயம் “சீனா” ஆகும்.

சீனாவின் அடாவடித்தனம் மற்றும் அராஜக போக்கு ஆகியவை இதற்கு மிக முக்கியமான காரணி ஆகும்.

சீன கப்பல்களிடம் இருந்து தன்னை பாதுகாக்கவே இந்தியாவிடம் இருந்து ஃபிலிப்பைன்ஸ் பிரம்மாஸ் ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.