பாகிஸ்தான் இந்தியா இடையே ராணுவ பயிற்சி ??

  • Tamil Defense
  • March 23, 2021
  • Comments Off on பாகிஸ்தான் இந்தியா இடையே ராணுவ பயிற்சி ??

இந்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற உள்ள பன்னாட்டு ராணுவ கூட்டு பயிற்சியில் இந்திய ராணுவம் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷாங்காய் கூட்டுறவு கவுன்சில் சார்பில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள நவ்ஷெரா மாவட்டத்தின் பப்பி பகுதியில் இந்த பயிற்சி நடைபெற உள்ளது.

இந்த பயிற்சியில் இந்தியா, சீனா, ரஷ்யா பாகிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ் குடியரசு மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கு பெற உள்ளன.

இந்த கூட்டு பயிற்சிகள் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் ஒழிப்பை மையக்கருவாக கொண்டது ஆகும்.

இந்த கூட்டு பயிற்சிகளை பாகிஸ்தானில் நடத்த உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

எது எப்படியோ இந்தியாவின் இறுதி முடிவு தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தால் எடுக்கப்படும், மேலும் இந்த வருடம் ரஷ்யாவில் நடைபெறும் இத்தகைய பயிற்சி ஒன்றில் இந்தியா கலந்து கொள்வது உறுதி ஆகியுள்ளது.