
ஆர்பாட்டம் இல்லாமல் படையில் இணைக்கபட்ட ஏவுகணை கண்காணிப்பு கப்பல் !!
கடந்த 2014ஆம் ஆண்டு முதலாக இந்தியா கோவா கப்பல் கட்டுமான தளத்தில் ரகசியமாக அதிநவீன கப்பல் ஒன்றை கட்டி வந்தது.
இந்த கப்பலானது இந்தியாவை தாக்க வரும் ஏவுகணைகளை கண்காணிக்க உதவும் முக்கியமாக அணு ஆயுத தாக்குதல்கள் குறித்த தகவல்கள் முன்கூட்டியே கிடைக்க பெறும்.
உலகிலேயே தற்போது நான்கே நாடுகளிடம் தான் இத்தகைய கப்பல்கள் உள்ளன அவையாவன அமெரிக்கா ரஷ்யா ஃபிரான்ஸ் மற்றும் சீனா இந்த பட்டியலில் ஐந்தாவது நாடாக இந்தியாவும் இணைந்து உள்ளது.
இந்த அதிநவீன கப்பல் 15000 டன்கள் எடை கொண்டது, இதில் 4 முக்கிய கண்காணிப்பு அமைப்புகள் உள்ளன இதனை இயக்க மட்டுமே சுமார் 14 மெகாவாட் மின்சக்தி தேவைப்படும்.
இந்த கப்பலை கட்டி முடிக்க சுமார் 725 கோடி ருபாய் ஆனதாக பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன ஆனால் இதுகுறித்த பல தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளன.