
இந்தியா மற்றும் ஃபிரான்ஸ் கடற்படைகள் இடையே அடுத்தடுத்து கடற்படை கூட்டுபயிற்சிகள் நடைபெற உள்ளன.
அடுத்த மாதம் லா பெரூஸ் மற்றும் வருணா என்கிற இரண்டு மிக முக்கியமான கடற்படை பயிற்சிகள் நடைபெறுகின்றன.
லா பெரூஸ் கடற்படை பயிற்சியானது வங்க கடலில் நடைபெற உள்ளது அதில் இந்தியா ஃபிரான்ஸ் மற்றும் பிற க்வாட் நாட்டு கடற்படைகள் கலந்து கொள்ள உள்ளன.
மேலும் இந்தியா ஃபிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரக கடற்படைகள் பங்கேற்கும் வருணா முத்தரப்பு கடற்படை பயிற்சிகள் நடைபெற உள்ளன.
இந்தியா ஃபிரான்ஸ் இடையேயான ஒத்துழைப்பு பாதுகாப்பு துறையில் பன்மடங்கு அதிகரித்து உள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற ரஃபேல் மற்றும் ஸ்கார்பீன் நீர்மூழ்கி ஒப்பந்தங்கள், மேலும் கூடுதல் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி ஒப்பந்தங்களை செயல்படுத்த ஃபிரான்ஸ் விரும்புகிறது.
இது தவிர ஃபிரெஞ்சு கடற்படை இந்திய கடற்படையுடன் பல்வேறு வகைகளில் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.