
ஜெனரல் பிபின் ராவத் சமீபத்தில் செகந்திராபாத்தில் உள்ள ராணுவ மேலாண்மை கல்லூரியால் நடத்தப்பட்ட வெபினார் ஒன்றில் பேசினார்.
அப்போது உலகின் எந்த ராணுவங்களுக்கும் இல்லாத சவால் இந்திய ராணுவத்துக்கு உள்ளதாகவும் சீனா மற்றும் பாகிஸ்தானை ஒருசேர கையாள இந்திய ராணுவம் தயாராக வேண்டும் என கூறினார்.
மேலும் பேசுகையில் சுதந்திரம் அடைந்த போது இந்திய ராணுவம் மிகச்சிறிய ராணுவமாக இருந்தது ஆனால் தற்போது உலகின் சக்திவாய்ந்த ராணுவங்களில் ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது.
போர்களை சந்திக்க தேவையான பயிற்சியும், அனுபவமும், தைரியமும், யுத்த தந்திரங்களும் இந்திய ராணுவத்திடம் நிறையவே உண்டு ஆனால் இந்திய ராணுவம் உருமாற்றம் அடைய வேண்டும்,
நவீன ஆயுதங்கள், படை அமைப்புகள் ஆகியவற்றில் இந்த மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் காரணம் இன்றைய காலத்திற்கேற்ப போர்முறை நவீனத்துவம் பெற்றுள்ளது அதற்கு நாமும் ஈடு கொடுத்தாக வேண்டும் எனவும்,
வருங்காலத்தில் சீனா இந்திய பெருங்கடல் பகுதிகளை சுற்றியுள்ள நாடுகளை அச்சுறுத்தி தனது ஆதிக்கத்தை இங்கு நிலைநாட்ட முயற்சிக்கும்,
ஆகவே அதனை எதிர்கொள்ள இந்திய கடற்படை பல மாற்றங்களை அடைய வேண்டும் அதனுடைய பலம் பெருக வேண்டும் என அவர் கூறினார்