
சியாச்சின் பனிமலை முகடுகளை சில காலம் முன்னர் சுற்றுலா பயணிகளுக்கு அரசு திறந்து விட்டது.
இதனையடுத்து தற்போது தேசப்பணியில் காயமடைந்து முடங்கிய வீரர்கள் சியாச்சினுக்கு செல்ல அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இதற்கான முயற்சிகள் இந்திய சிறப்பு படைகளில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற வீரர்கள் நடத்தும் க்ளாவ் என்கிற அமைப்பு முன்னெடுத்தது.
இதன் நிறுவனர் மற்றும் தலைவர் முன்னாள் பாரா சிறப்பு படை அதிகாரியான மேஜர் விவேக் ஜேக்கப் என்பது குறிப்பிடத்தக்கது.