இந்தியா ஃபிலிப்பைன்ஸ் பிரம்மாஸ் ஒப்பந்தம் கையெழுத்து !!
1 min read

இந்தியா ஃபிலிப்பைன்ஸ் பிரம்மாஸ் ஒப்பந்தம் கையெழுத்து !!

இன்று ஃபிலிப்பைன்ஸ் ராணுவ தலைமையகமான ஃபோர்ட் அகினால்டோவில் இந்தியா ஃபிலிப்பைன்ஸ் பிரம்மாஸ் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.

இந்திய தூதர் ஷம்பு குமாரன் மற்றும் ஃபிலிப்பைன்ஸ் பாதுகாப்பு துறை இணைசெயலர் ரேமன்ட் எலிஃபன்டெ ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டனர்.

இந்த விழாவில் ஃபிலிப்பைன்ஸ் பாதுகாப்பு துறை செயலாளர் டெல்ஃபின் லோரென்ஸா கலந்து கொண்டார்.

இந்த ஏவுகணைகளை ஃபிலிப்பைன்ஸ் கடலோர பாதுகாப்புக்கு பயன்படுத்தும்,

அதாவது அத்துமீறும் எதிரி கப்பல்களை இந்த ஏவுகணைகளை கொண்டு தாக்கி அழிக்க முடியும், இது சீனாவுக்கு செக் வைக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

இந்த ஏவுகணை ஒப்பந்தம் மூலமாக இந்தியா உலக ஆயுத சந்தையில் முக்கியமான ஏற்றுமதியாளர்களில் ஒருவராக தன் கணக்கை துவங்கி உள்ளது.