பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வா இந்தியா மற்றும் பாகிஸ்தான் பழைய விஷயங்களை மறந்து விட்டு முன்னோக்கி செல்ல வேண்டும் என பேசியுள்ளார்.
காஷ்மீர் விவகாரம் தான் இந்தியா பாகிஸ்தான் பிரச்சினையின் மையப்புள்ளி ஆகவே அதற்கு அமைதியாக தீர்வு காண இந்தியா முயல வேண்டும் என கூறியுள்ளார் .
இதற்கு ஒரு நாள் முன்னரே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இதே போன்றதொரு கய
கருத்தை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் ராணுவம் அந்நாட்டின் 70ஆண்டு கால வரலாற்றில் பாதிக்குமேல் ஆட்சி செய்த அமைப்பு,
மேலும் எப்போதுமே வெளியுறவு கொள்கைளில் அதன் ஈடுபாடு இருக்கும் தற்போதும் அப்படி தானோ எனும் சந்தேகம் வலுக்கிறது.
இந்தியா இதற்கு முன்னரே பாகிஸ்தானுடன் சமாதானத்தை விரும்புகிறோம் ஆனால் அதற்கு பயங்கரவாதத்தை பாக் ஒழிக்க வேண்டும் என கூறியதும்,
பாகிஸ்தான் எல்லையோரம் அமைதியை கடைபிடிக்க விரும்புவதாகவும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.