3 பில்லியன் டாலர்கள் மதிப்பில் ட்ரோன்கள் வாங்க முடிவு !!

இந்தியா தனது ராணுவத்திற்கு சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஆயுதம் தாங்கிய ட்ரோன்கள் வாங்க முடிவு செய்துள்ளது.

இந்த ட்ரோன்கள் ப்ரடேட்டர் ரகத்தை சேர்ந்தவை ஆகும், 6000 நாட்டிகல் மைல் தொலைவு இயக்க வரம்பு கொண்ட இவற்றால் 48 மணி நேரம் வரை தொடர்ந்து பறக்க முடியும்.

மேலும் இரண்டு டன்கள் வரையிலான சுமைதிறன் கொண்ட இவற்றால் பல்வேறு வகையான ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை சுமக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் இரண்டு படைகள் மட்டுமே இத்தகைய ட்ரோன்கள் வாங்க விருப்பம் தெரிவித்தன ஆனால் தற்போது முப்படைகளும் இந்த ட்ரோன்களை பெற விரும்புகின்றன.

ஆகவே ஒவ்வொரு படைக்கும் தலா 10 ட்ரோன்கள் வீதம் மொத்தமாக 30 ட்ரோன்களை 3 பில்லியின் அமெரிக்க டாலர்கள் செலவில் வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த ட்ரோன்கள் அதிக விலை மதிப்பு கொண்டதால் குறைந்த எண்ணிக்கையில் வாங்கபடுகின்றன, ஆரம்பத்தில் கடற்படை மட்டுமே இத்தகைய 22 ட்ரோன்கள் வாங்க விரும்பியது குறிப்பிடத்தக்கது.