Breaking News

அருணாச்சல பிரதேசத்தில் யூரேனியம் கண்டறிய ஆய்வு !!

  • Tamil Defense
  • March 29, 2021
  • Comments Off on அருணாச்சல பிரதேசத்தில் யூரேனியம் கண்டறிய ஆய்வு !!

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தின் கீழ் வரும் அணுசக்தி துறையின் ஒரு பிரிவு தான் “அணு கனிம வளங்கள் தேடுதல் மற்றும் ஆய்வு இயக்குநரகம்” எனும் அமைப்பாகும்.

இந்த அமைப்பானது நாட்டின் பல்வேறு பகுதிகளில் டைட்டேனியம், ஸிர்க்கோனியம், யூரேனியம், தோரியம் மற்றும் பிற கனிம வளங்களை கண்டறியும் அமைப்பாகும்.

பெங்களூர், ஹைதராபாத், நாக்பூர், ஜாம்ஷெட்பூர்,ஜெய்ப்பூர், தில்லி மற்றும் ஷில்லாங் ஆகிய நகரங்களில் அமைந்துள்ள தேடுதல் மற்றும் ஆய்வு மையங்கள் மூலமாக இந்த பணிகளை மேற்கொள்கிறது.

அந்த வகையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் யூரேனியம் இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதால் அங்கு இதுகுறித்த ஆய்வு பணிகளை மேற்கொண்டு உள்ளது.

அருணாச்சல பிரதேசம் தனது பகுதி எனக்கூறி இந்த ஆய்வு பணிகளுக்கு சீனா கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.