
கூட்டு படைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஃபிக்கி அமைப்பு நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் இந்திய ராணுவ வீரர்கள் உயர்ந்த பனிமலைகள் பாலைவனங்கள் காடுகள் போன்ற பல்வேறு தட்பவெப்ப நிலைகள் உள்ள பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர்.
அத்தகைய சூழல்களில் அவர்களை காக்க அதற்கேற்ற சீருடைகள் அவசியம் தற்போது மிகப்பெரிய அளவில் நாம் அவற்றை இறக்குமதி செய்து வருகிறோம்.
ஆனால் இந்திய நிறுவனங்கள் இத்தகைய அதிநவீன “டெக்னோ க்ளோதிங்” தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தரமான சீருடைகள் தயாரித்தால் ஆதரிப்பது மட்டுமின்றி,
இறக்குமதியை நிறுத்தி உள்நாட்டிலேயே கொள்முதல் செய்து தன்னிறைவை ஆதரிப்போம் என்றார்.
மேலும் பேசுகையில் கடந்த காலங்களில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ராணுவ தளவாடங்களின் இறக்குமதியை ரத்து செய்த சமபவங்களை சுட்டி காட்டினார்.