பன்னாட்டு விமானப்படைகள் பயிற்சியில் கலந்து கொள்ளும் இந்தியா !!

  • Tamil Defense
  • March 2, 2021
  • Comments Off on பன்னாட்டு விமானப்படைகள் பயிற்சியில் கலந்து கொள்ளும் இந்தியா !!

நாளை ஐக்கிய அரபு அமீரகத்தில் டெஸர்ட் ஃப்ளாக் எனும் விமானப்படை போர் பயிற்சி தொடங்க உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, ஃபிரான்ஸ், பஹ்ரைன், தென்கொரியா, சவுதி அரேபியா உள்ளிட்ட 10 நாடுகள் பங்கேற்க உள்ளன.

மேலும் மூன்று வாரம் நடைபெற உள்ள இந்த பயிற்சியில் ஜோர்டான், எகிப்து மற்றும் க்ரீஸ் ஆகிய நாடுகள் பார்வையாளர்களாக கலந்து கொள்கின்றன.

இந்த பயிற்சியில் இந்திய விமானப்படையும் சுகோய்30 மற்றும் சி17 விமானங்களுடன் கலந்து கொள்கிறது.

இதற்காக 6 சுகோய்30 போர் விமானங்கள் மற்றும் 2 சி17 போக்குவரத்து விமானங்கள் புறப்பட்டு சென்றுள்ளன.