ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் பகுதியில் திங்கட்கிழமை அன்று என்கவுன்டர் ஒன்று நடைபெற்றது.
அந்த என்கவுன்டரின் போது ஒரு வீட்டில் நான்கு பயங்கரவாதிகள் மறைந்து இருப்பது தெரிய வந்த நிலையில்,
25 வயதான பயங்கரவாதி அக்யீப் அஹமது மாலிக் என்பவன் கடந்த மூன்று மாதங்கள் முன்னர் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்த தகவல் கிடைக்கவே,
ராணுவத்தினர் அவனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலமாக சமரசம் பேசி சரணடைய வைக்க முயற்சித்தனர்,
அப்போது அவனது நான்கு வயது குழந்தை “அப்பா வந்து விடுங்கள் உங்களை பார்க்க முடியவில்லை” என கெஞ்சியது மனதை உருக்குவதாக அமைந்தது.
தொடர் சமரச முயற்சிகள் பலனளிக்காத நிலையில் ராணுவம் என்கவுன்டர் நடவடிக்கையை செயல்படுத்தியது இதில் நால்வரும் கொல்லப்பட்டனர்.
அஹமது மாலிக் சரணடைய விரும்பிய போது அவனது சகாக்கள் அவனை விடவில்லை என கூறப்படுகிறது.