1 min read
பழைய கிரண் விமானங்களை ட்ரோன்களாக மாற்றும் ஹெச்.ஏ.எல் காரணம் என்ன ??
ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் பழைய கிரண் பயிற்சி ஜெட் விமானங்களை ஆளில்லா விமானங்களாக மாற்ற சில காலம் முன்னர் விருப்பம் தெரிவித்தது.
தற்போது அதற்கான பணிகளும் துவங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த கிரண் விமானங்கள் படையில் இருந்து விலக்கப்பட்ட நிலையில் உள்ளன அவற்றை தற்போது ஆளில்லா விமானங்களாக மாற்றி வருகின்றனர்.
இதனால் அடுத்த தலைமுறை ஆளில்லா விமானங்களை உருவாக்க தேவையான சில தொழில்நுட்பங்களை இவற்றில் சோதித்து பார்க்க முடியும்,
மேலும் அதிநவீன தொலைதூர ஏவுகணைகளை சோதிக்கவும் இவற்றை இலக்காக பயன்படுத்தி கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.