செஷல்ஸ் நாட்டிற்கு 300 டன் அதிவேக ரோந்து படகு வழங்க ஒப்பந்தம் !!

  • Tamil Defense
  • March 6, 2021
  • Comments Off on செஷல்ஸ் நாட்டிற்கு 300 டன் அதிவேக ரோந்து படகு வழங்க ஒப்பந்தம் !!

கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் கப்பல் கட்டுமான தளத்தில் இருந்து ஒரு அதிவேக ரோந்து படகை வாங்க செஷல்ஸ் அரசு ஒப்பந்தம் செய்து உள்ளது.

இந்த ரோந்து படகு 300 டன்கள் எடையும், 1500 நாட்டிகல் மைல் இயக்க வரம்பும், 40 அல்லது 60மிமீ துப்பாக்கிகளை கொண்டிருக்கும்.

மேலும் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் உட்பட 35 பேர் தங்க நவீன வசதிகளையும் கொண்டிருக்கும்.

இந்த அதிவேக ரோந்து படகு எல்லை கண்காணிப்பு, கடத்தல் தடுப்பு, வேட்டை தடுப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.