
அதன்படி கடந்த 2003ஆம் ஆண்டு முதல் சீனா ஜெர்மனியிடமிருந்து பல அதிநவீன நீர்மூழ்கி கப்பல் என்ஜின்களை வாங்கி உள்ளது.
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட அமெரிக்க ராணுவ ரிப்போர்ட்டில் உள்ள அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
சீன கடற்படையின் சாங் மற்றும் யுவான் வகுப்பு டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களுக்கு எம்.டி.யு எஸ்.இ84 ரக என்ஜின்கள் வாங்கப்பட்டு உள்ளன.
இதன் காரணமாக சீன கடற்படையின் நீர்மூழ்கி கப்பல்கள் படை கணிசமான அளவில் பலம் பெற்றுள்ளது, இது மிகப்பெரிய தவறு என அந்த அறிக்கை கூறுகிறது.