
ஏகே-47 துப்பாக்கி மற்றும் போர் தளவாடங்களோடு மியான்மர் எல்லையில் காவல் பணியில் ஈடுபட்டு வருகிறார் ரைபிள்விமன் ஜக்ரிதி..கடினமான பாதை ,ஆற்றுப்பகுதி என கடினம் நிறைந்த பாதைகளில் தனது அன்றாட ரோந்து பணிகளை மேற்கொள்கிறார்.மியான்மரில் இராணவ புரட்சி நடந்து மக்கள் இந்தியா நோக்கி வரும் இன்னேரத்தில் அவரது இந்த ரோந்து பணி நடைபெற்று வருகிறது.
எல்லை காவல் பணிகள் ஆகட்டும்,போதைப்பொருள் தடுப்பு பணிகள் ஆகட்டும் அல்லது காஷ்மீரில் இராணுவத்திற்கு உதவிகரமாக செயல்படும் பணிகள் ஆகட்டும் அஸ்ஸாம் ரைபிள்சின் ரைபிள் விமன் படைப் பிரிவு ஆகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ஆண் வீரர்களுக்கு இணையாக பெண் வீரர்களும் எந்த பாகுபாடும் இல்லாமல் தங்களது பணியை செய்து வருகின்றனர்.தற்போது ரைபிள் விமன் படைப் பிரிவில் 200 பெண் வீரர்கள் உள்ளனர்.