
இந்தியாவிற்கு F4 ரக ரஃபேல் விமானங்கள் மற்றும் அடுத்த தலைமுறை மைக்கா ஏவுகணைகளை விற்க ஃபிரான்ஸ் முயன்று வருகிறது.
அடுத்த மாதம் 20-22 ஆகிய நாட்களில் ஃபிரான்ஸ் நாட்டிற்கு சுற்று பயணமாக செல்ல உள்ளார், அப்போது ஃபிரான்ஸ் குழுவினர் அவரிடம் இதுகுறித்து பேச உள்ளனர்.
எஃப்4 ரக ரஃபேல் விமானங்களில் அதிநவீன ரேடார், சென்சார், ஆப்ட்ரானிக்ஸ் அமைப்புகள் மற்றும் அடுத்த தலைமுறை மைக்கா ஏவுகணைகள், 1000 கிலோ எடையிலான தரை தாக்குதல் ஏவுகணைகள் ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ள முடியும்.
அடுத்த 40 நாட்களில் 12 ரஃபேல் போர் விமானங்கள் டெலிவரி செய்யப்படும் தற்போது 11 விமானங்கள் இந்தியாவில் உள்ளன,
7 விமானங்கள் ஃபிரான்ஸில் இந்திய விமானிகளின் பயிற்சிக்காக உள்ளன, மீதமுள்ள 6 விமானங்களும் இந்த வருட இறுதிக்கு முன்னர் டெலிவரி செய்யப்படும்.