
SP-20 எனப்படும் FOC அனுமதி பெற்ற நான்காவது தேஜஸ் மார்க் 1 விமானத்தை ஹால் தயாரித்து தற்போது சோதனைக்கு உட்படுத்தி வருகிறது.இந்த விமானத்தின் ஹால் நிறுவத்தின் சீப் சோதனை விமானி ராஜிவ் ஜோசி அவர்கள் சோதனை செய்துள்ளார்.இந்த வருடத்தில் பறக்கும் இரண்டாவது FOC அனுமதி பெற்ற தேஜஸ் விமானம் இதுவாகும்.
இந்த நிதியாண்டிற்குள் மேலும் இரு விமானங்களை தயாரித்து பறத்தல் சோதனை மேற்கொள்ள ஹால் திட்டமிட்டுள்ளது.கொரானா வைரஸ் காரணமாக தேஜஸ் தயாரிப்பு பணிகள் கடும் பாதிப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
2020-21 ஆம் நிதியாண்டிற்குள் ஹால் எட்டு விமானங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.லாக்டௌனிற்கு பிறகு தற்போது சப்ளை லைன்கள் துரிதமாக செயல்படுவதால் இன்னும் சில மாதத்திற்குள் FOC அனுமதி பெற்ற தேஜஸ் விமானங்கள் டெலிவரி செய்யப்படும் என ஹால் நிறுவன தலைவர் மாதவன் அவர்கள் கூறியுள்ளார்..