நக்சல்கள் தாக்குதலில் ஐந்து வீரர்கள் வீரமரணம்

  • Tamil Defense
  • March 25, 2021
  • Comments Off on நக்சல்கள் தாக்குதலில் ஐந்து வீரர்கள் வீரமரணம்

சத்திஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் வீரர்கள் பயணித்த பேருந்தை கண்ணிவெடி மூலம் தாக்கியதில் ஐந்து வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.13 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

நாராயண்பூரில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த சத்திஸ்கரின் மாவட்ட ரிசர்வ் கார்டு படையின் மீது தான் இந்த கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் ஐந்து வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.காயமடைந்த வீரர்கள் அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.விமானப்படைக்கு சொந்தமான வானூர்திகள் மூலம் ராய்ப்பூர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தலைமை காவலர்கள் பவன் மந்தாவி மற்றும் ஜய்லால் உய்கி, கான்ஸ்டபிள்ஸ் காரா தெகாரி,செவல் சலாம் மற்றும் துணை காண்ஸ்டபிள் விஜய் பாட்டேல் ஆகிய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.