காவிரி என்ஜின் குறித்த புது அப்டேட்…!

  • Tamil Defense
  • March 27, 2021
  • Comments Off on காவிரி என்ஜின் குறித்த புது அப்டேட்…!

காவேரி என்ஜினுக்கான உலோகம் தயாரிப்பு !!

இந்தியாவின் மிதானி நிறுவனம் காவேரி என்ஜினுக்கான முதல் தொகுதி உலோகத்தை தயாரித்து உள்ளது.

தற்போது இந்த உலோகத்தின் சப்ளையை அந்நிறுவனம் தொடங்கி உள்ளது.

அதற்கான விழாவில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஒரு பிரிவான செமிலாக்கின் தலைமை பொறியாளர் மற்றும் மிதானி நிறுவனத்தின் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு உலோகம் நிக்கல் மற்றும் டைட்டேனியம் ஆகிய இரு உலோகங்களின் கூட்டு உலோகம் ஆகும்.

இது 75% உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள் மேலும் என்ஜினுடைய 1ஆம் மற்றும் 2ஆம் ரக பாகங்களை தயாரிக்க இந்த உலோகம் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.