40% அணு ஆயுத உயர்வை அறிவித்த இங்கிலாந்து ஒரு பார்வை !!

  • Tamil Defense
  • March 17, 2021
  • Comments Off on 40% அணு ஆயுத உயர்வை அறிவித்த இங்கிலாந்து ஒரு பார்வை !!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜாண்சன் தலைமையிலான அரசு புதிய அறிவிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதன்படி இங்கிலாந்தின் ட்ரைடண்ட் அணு ஆயுத அமைப்புகளை சுமார் 40% அளவுக்கு உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இதன்மூலம் 30 வருட காலமாக அணு ஆயுதங்களை குறைத்து வரும் இங்கிலாந்தின செயல்பாடு மாறப்போகிறது.

ரஷ்யா மற்றும் சீனாவின் நடவடிக்கைகள் இதற்கான முக்கிய காரணிகள் அவற்றை உதாசீனம் செய்ய முடியாது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இது பிரதமர் போரிஸ் ஜாண்சனுடைய உலகளாவிய பிரட்டன் என்ற தொலைநோக்கு திட்டத்தின் ஒரு பகுதி எனவும் கூறப்படுகிறது.

தற்போது ரஷ்யா 4300 அணு ஆயுதங்களுடன் முதல் இடத்திலும், அமெரிக்கா 3800 அணு ஆயுதங்களுடன் இரண்டாவது இடத்திலும்,

சீனா 320, ஃபிரான்ஸ் 290 மற்றும் இங்கிலாந்து 215 அணு ஆயுதங்களுடன் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன. உலி அமைதிக்கு ஊறு விளைவிக்கும் நடவடிக்கை எனவும், கொரோனா பேரிடர் காலத்தில் தேவையற்ற செயல் எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.