சட்டீஸ்கர் மாநிலம் ஜக்தால்பூர் அருகே மத்திய ரிசர்வ் காவல்படைக்கான ரஸ்டம்-1 ரக ட்ரோன் ஒன்று சோதனை ஏ.டி.இ அமைப்பால் சோதனை செய்யப்பட்டது.
இதனை அடுத்து அந்த ட்ரோன் தரை இறங்கும் போது இறங்குதளத்தின் சுற்று சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த வகை ட்ரோன் தானியங்கி முறையில் மேலேழும்பும் இறங்கும் திறன்களை கொண்டது, ஆனால் விபத்தின் போது தானியங்கி முறையில் இயங்கியதா என்பது குறித்த தகவல் இல்லை,
அதே நேரத்தில் சில தகவல்கள் ட்ரோன் தரை இறங்கும் போது கட்டுபாட்டாளரின் கட்டுபாட்டில் இருந்ததாகவும் அவருடைய தவறு காரணமாகவே விபத்தில் சிக்கியதாகவும் தெரிவிக்கின்றன.
இந்த ரஸ்டம்-1 ரக ட்ரோனை நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த பஸ்தார் வனப்பகுதியில் மத்திய ரிசர்வ் காவல்படை பயன்படுத்த திட்டமிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.