AIP அமைப்பை முழுவதும் உள்நாட்டிலேயே தயாரித்து சாதனை !!

  • Tamil Defense
  • March 10, 2021
  • Comments Off on AIP அமைப்பை முழுவதும் உள்நாட்டிலேயே தயாரித்து சாதனை !!

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் AIP அமைப்பை உள்நாட்டிலேயே தயாரித்து சாதனை படைத்துள்ளது.

பொதுவாக டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கிகளில் எரிபொருள் எரிய ஆக்ஸிஜன் தேவை இதற்காக நீர்மூழ்கி கப்பல்கள் அடிக்கடி மேல்பரப்பிற்கு வந்து காற்றை உறிஞ்ச வேண்டியதாகிறது.

இன்றைய காலத்தில் நீர்மூழ்கிகளை கண்டுபிடிக்க பல நவீன தொழில்நுட்பங்கள் பயன்பாட்டில் உள்ளன.

இதனால் மேற்பரப்பில் இருக்கும் நீர்மூழ்கி கப்பல்கள் எதிரிகளிடம் எளிதாக சிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

அதனை தடுக்கவே இந்த AIP அமைப்பு பயன்படுத்தி வரப்படுகிறது இந்த அமைப்பு கப்பலுக்கு உள்ளேயே தேவையான ஆக்ஸிஜனை தயாரித்து வழங்கும்.

பல நாடுகள் பல்வேறு வகையான AIP அமைப்புகளை பயன்படுத்தி வருகின்றன ஆனால் FUEL CELLஐ அடிப்படையாக கொண்ட AIP அமைப்பு தனித்துவமானது.

இதனை நாம் உருவாக்கி வெற்றிகரமாக சோதித்து உள்ளோம் இனி நமது சொந்த AIP அமைப்புகள் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.