இந்தியாவில் சைபர் தாக்குதல்; இலக்கான தூத்துக்குடி துறைமுகம் உள்ளிட்ட 10 இடங்கள் !!

இந்தியாவில் 10 முக்கிய அமைப்புகள் மீது சீன ஆதரவு பெற்ற ரெட்எக்கோ எனும் அமைப்பு சைபர் தாக்குதல் நடத்தி உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி துறைமுகம், மும்பை துறைமுகம், குட்கி மின் நிலையம் மற்றும் பல மின்சார சப்ளை அமைப்புகள் இந்த தாக்குதலுக்கு இலக்காகி உள்ளன.

லடாக் எல்லையில் சீனாவுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு இது மறைமுகமான பதிலடியாக பார்க்கப்படுகிறது.

இந்த தாக்குதல்களை அமெரிக்காவை சேர்ந்த ரெக்கார்டட் ஃப்யூச்சர் நிறுவனமும் உறுதிப்படுத்தி உள்ளது.

அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரைட் ஆல்பெர்க் கூறுகையில் ஐரோப்பாவில் நடைபெற்ற சைபர் தாக்குதலை போன்று இதுவும் நடைபெற்று உள்ளதாக கூறினார்.