
குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உள்ள கேவாடியா நகரில் வருடாந்திர முப்படை தளபதிகள் மாநாடு இன்று துவங்கியது, இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கூட்டு படை தலைமை தளபதி மற்றும் முப்படை தலைமை தளபதிகள் கலந்து கொண்டனர்.
மேலும் முப்படைகளை சேர்ந்த பல்வேறு மட்டத்திலான பல்வேறு படை பிரிவுகளின் தளபதிகளும் பங்கேற்றனர்.
நாளை முதல் முறையாக பிரதமர் இந்த வருடாந்திர தளபதிகள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் முதல் முறையாக இடைநிலை அதிகாரிகள் மற்றும் வீரர்களின் கருத்துக்களையும் கேட்டறிய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக பாதுகாப்பு அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாநாட்டில் கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் வரும் ஆண்டில் செய்யப்பட வேண்டியவை குறித்த ஆலோசனை நடைபெறும்என்பது குறிப்பிடத்தக்கது.