
நேற்று தைவான் நாட்டின் வான் பாதுகாப்பு அடையாள பகுதிக்குள் சீன போர் விமானங்கள் அத்துமீறி உள்ளன.
சீன விமானப்படையின் பத்து ஜே-16 போர் விமானங்கள், இரண்டு ஜே-10 போர் விமானங்கள், நான்கு ஹெச்-6கே குண்டுவீச்சு விமானங்கள், இரண்டு ஒய்-8 நீர்மூழ்கி எதிர்ப்பு விமானங்கள்,
மேலும் ஒரு கேஜே-500 கண்காணிப்பு விமானங்கள், ஒய்-8 உளவு விமானங்கள் ஆகியவை இந்த அத்துமீறலில் ஈடுபட்டதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கு முந்தைய நாள் தான் அமெரிக்கா மற்றும் தைவான் அரசுகள் ஒர் கடல்சார் ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது குறிப்பிடத்தக்கது.
இதே போல கடந்த ஃபெப்ரவரி மாதம் 19ஆம் தேதி அன்று 11 சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்தன.
இதற்கு முன்னர் இரண்டு அமெரிக்க செனட்டர்கள் தைவான் மீது சீனா பலப்பிரயோகம் செய்வதை கண்டித்து தீர்மானம் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
ஆகவே தைவானுக்கு ஆதரவான ஏதேனும் ஒரு செயல் நிகழ்ந்தால் சீனா அதற்கு இப்படி எதிர்வினை ஆற்றுகிறது என்பது தெளிவாகிறது.