சீன நீர்மூழ்கி வீரர்களுக்கு தீவிர மன பாதிப்புகள் !!

சீன கடற்படையின் நீர்மூழ்கி படைப்பிரிவு வீரர்கள் தீவிர மனநாம் லை பாதிப்புகளை சந்திப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன ராணுவ மருத்துவ பல்கலைகழகத்தால் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

சுமார் 580 வீரர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 511 வீரர்களுக்கு இத்தகைய பாதிப்புகள் இருப்பது தெரிய வந்துள்ளது அதாவது 5ல் 1 வீரர் என்ற விகிதத்தில் இது உள்ளது.

சீனா தற்போது தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட தனது நீர்மூழ்கி படைப்பிரிவை அதிகமாக பயன்படுத்தி வருகிறது, இதனால் நீண்ட நாட்கள் இடைவிடாத பணி காரணமாகவும்,

நீர்மூழ்கி கப்பல்களில் வெளி உலகை காண முடியாத சூழல், செயற்கை வெளிச்சத்தில் வாழ வேண்டிய கட்டாயம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

அதிலும் குறிப்பாக அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களில் பணியாற்றும் வீரர்களுக்கு பாதிப்பு அதிகமாக உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

தற்போது சீன கடற்படையில் ஒட்டுமொத்தமாக 60 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன, அவற்றில் ஏறத்தாழ 10 அணுசக்தி நீர்மூழ்கிகளாகும்.

எதிர்காலத்தில் அதாவது அடுத்த 10 ஆண்டுகளில் சீன கடற்படை 6 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை படையில் இணைக்க முயற்சித்து வருவதாக அமெரிக்க கடற்படை ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.