தொல்லை தரும் சீனா; போர்க்கப்பல்களை அனுப்பும் பிலிப்பைன்ஸ்

  • Tamil Defense
  • March 27, 2021
  • Comments Off on தொல்லை தரும் சீனா; போர்க்கப்பல்களை அனுப்பும் பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்சிற்கு சொந்தமான தீவுப் பகுதியில் சீனாவை சேர்ந்த கப்பல்கள் முகாமிட்டுள்ளன.சீனாவின் கடற்சார் மிலிசிய எனப்படும் இந்த கப்பல்களை எதிர்காெள்ள பிலிப்பைன்ஸ் மேலதிக போர்க்கப்பல்களை அங்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

வொயிட்சன் ரீப் எனப்படும் இந்த தீவுப்பகுதியில் கப்பல்களை நிறுத்தி இந்த கடற்பகுதியை சீனா முழுதாக உரிமை கொண்டாடி வருகிறது.இந்த தீவு பகுதியில் சுமார் 183 கப்பல்களை சீனா நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 7ம் தேதி சுமார் 220 கப்பல்கள் வரை இந்த தீவுப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தன.தற்போது 183 கப்பல்கள் வரை தீவுப் பகுதியை ஆக்கிரமித்துள்ளன.

இது குறித்து கூறியுள்ள சீனா இந்த படகுகள் வானிலை காரணமாகவே அங்கு நிறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலியா,கனடா ஆகிய நாடுகள் தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளன.தைவான்,மலேசியா,பிலிப்பைன்ஸ் மற்றும் புருனே ஆகிய நாடுகளின் பகுதிகளை சீனா வரலாற்று அடிப்படையில் உரிமை கொண்டாடி வருகிறது.