உலகின் இரண்டாவது பெரிய அணுசக்தி நாடாக மாற சீனா முயற்சி ?? அதிர்ச்சி தகவல் !!

  • Tamil Defense
  • March 11, 2021
  • Comments Off on உலகின் இரண்டாவது பெரிய அணுசக்தி நாடாக மாற சீனா முயற்சி ?? அதிர்ச்சி தகவல் !!

அமெரிக்க செனட்டில் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் முப்படைகள் செனட் கமிட்டி அந்நாட்டு தளபதிகளிடம் பல்வேறு வகையான கேள்விகளை முன்வைத்தது.அதில் மிகவும் அதிர்ச்சி அளிக்க கூடிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அமெரிக்க செனட்டர் டாம் காட்டன் அமெரிக்காவின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த கட்டளையகமான இந்தோ பசிஃபிக் கட்டளையகத்தின் தளபதியிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார்.

சீனா இந்த பத்தாண்டுகளின் இறுதியில் (2030) அமெரிக்காவை விட பெரிய அணுசக்தி நாடாக மாறுமா ?? என்ற அந்த கேள்விக்குஅட்மிரல் ஃபிலிப்ஸ் டேவிட்சன் பதில் அளித்தார்.

அப்போது அவர் ஆம் சீனர்கள் தற்போது இருப்பதை விட நான்கு மடங்கு அதிகமாக அணு ஆயுதங்களை அதிகபடுத்தினால் நிச்சயமாக சாத்தியம் என்றார்.

இது நிச்சயமாக லேசாக எண்ண வேண்டிய விஷயம் அல்ல காரணம் அமெரிக்கர்கள் ஏற்கெனவே இதற்கு தயாராகி இருப்பர் இந்தியாவும் தயாராக வேண்டும்.