ஹைப்பர்சானிக் ட்ரோன்களை தயாரிக்கும் சீனா !!

  • Tamil Defense
  • March 21, 2021
  • Comments Off on ஹைப்பர்சானிக் ட்ரோன்களை தயாரிக்கும் சீனா !!

சீனா ஹைப்பர்சானிக் ட்ரோன்களை தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன ஆராய்ச்சியாளர்கள் இந்த ஹைப்பர்சானிக் ட்ரோன்களை ஒருங்கிணைந்த கூட்டமாக பயன்படுத்தி கொள்ள ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

வழக்கமான ட்ரோன்கள் கூட்டமே மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்த வல்லவை ஆகும் அதே நேரத்தில் இவை அதீத வேகத்துடன் செயல்படுபவை ஆகும்.

ஆகவே இவை ஏவுகணைகளை விட ஆபத்தானவை அதிக சேதம் ஏற்படுத்த கூடிய திறன் கொண்டவை ஆகும்.

மேலும் இவற்றின் அதிக வேகம் காரணமாக எந்த வித தடுப்பு அமைப்புகளையும் எளிதில் ஊடுருவி செல்ல முடியும்.

அதுவும் அதிக எண்ணிக்கையில் குழுவாக செயல்படுவதால் இவற்றை தடுப்பது மிகவும் கடினமான காரியம் ஆகும்.