
சீன பாராளுமன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில் அந்நாட்டு அதிபர் லீ கெகியாங் பாதுகாப்பு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது அவர் இந்த வருடம் சுமார் 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
இது இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட்டை விட சுமார் மூன்று மடங்கு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொடர்ந்து கடந்த ஆறு வருடங்களாக ஒற்றை இலக்கத்தில் சீன பாதுகாப்பு பட்ஜெட் வளர்ச்சி அடைந்து வருகிறது, இதன் காரணமாக சீனா தனது படைகளில் நவீன தளவாடங்களை விரைவாக இணைத்து வருகிறது.
கடந்த வருடம் சீனா சுமார் 194 பில்லியன் அமெரிக்க டாலர்களை பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கீடு செய்தது.
கூடுதலாக இந்த வருடம் சீனா தனது ராணுவ வீரர்களுக்கு சுமார் 40% ஊதிய உயர்வையும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு பட்ஜெட்டுக்கான 35 பக்க அறிக்கையை சமர்பித்து விட்ட பேசிய சீன பிரதமர் லீ கெகியாங்;
சீன ராணுவம் சீன கம்யூனிஸ்ட் புரட்சியின் நூற்றாண்டு கால இலக்குகளை அடைய திறம்பட செயல்பட வேண்டும் எனவும், அரசியல் தலைமைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் எனவும் நவீன தொழில் நுட்பத்தில் சிறப்புடன் விளங்க வேண்டும் எனவும் கூறினார்.