இந்திய விமானப்படை தளம் அமைந்துள்ள தவ்லத் பெக் ஒல்டி பகுதியில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தியான்வென்டியான் எனும் சீன ராணுவ முகாமில் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
சமீபத்தில் வெளியான சில படங்களில் இந்த முகாமில் அதிக அளவில் ராணுவ வாகனங்கள் நடமாட்டம் இருப்பது தெரிய வந்துள்ளது.
1962 போருக்கு பின்னர் சீனாவால் கட்டப்பட்ட இந்த தளம் படிப்படியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது, தற்போது அனைத்து காலநிலைகளிலும் இயங்கும் வகையில் இந்த தளம் உள்ளது.
இந்த தளத்தில் புதிய உறைவிடங்கள், வாகனங்கள் நிறுத்தும் வசதி, விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், தடுப்பு சுவர்கள்என பல்வேறு வகையான வசதிகள் உள்ளன.
தெப்சாங் சமவெளி இந்தியாவின் பாதுகாப்பிற்கு மிக முக்கியமானது, மேலும் சீனாவின் பொருளாதார வழிதடத்திற்குள் மிக அருகில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.