
சமீபத்தில் உத்தரகண்ட் தலைநகர டேராடுனில் உள்ள யு.பி.இ.எஸ் பல்கலைகழகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் இஸ்ரோ தலைவர் முனைவர் சிவன் கலந்து கொண்டார்.
அங்கு “ஏரோஸ்பேஸ் மற்றும் ஏவியானிக்ஸ் துறையில் இந்தியாவின் எதிர்காலம்” என்ற.தலைவப்பில் மாணவ/ மாணவிக்ள இடையே பேசினார்.
அப்போது சந்திரயான்-3 2022ஆம் ஆண்டு ஏவப்படும் எனவும், மங்கள்யான்-2 க்கான திட்டம் தொடங்கி உள்ளதாகவும் பேசினார்.
மேலும் தற்போது மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்கான ககன்யான் திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்கப்பட்டு வருவதாகவும்,
இந்த வருட இறுதியில் இதற்கான சோதனை ஏவுதல் நடைபெறும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் பேசுகையில் பல்வேறு அதிக திறன் கொண்ட என்ஜின்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத எரிபொருள்களை தயாரித்து ராக்கெட்டுகளில் பயன்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.